கை குழந்தையுடன் தூங்கிய பெண்.. பதறியபடி நுழைந்த ரவுடி.. கொத்தி குதறி கொன்ற பயங்கரம்.!

0 5934
கை குழந்தையுடன் தூங்கிய பெண்.. பதறியபடி நுழைந்த ரவுடி.. கொத்தி குதறி கொன்ற பயங்கரம்.!

சென்னை புதுப்பேட்டையில் கூலிப்படையினர் துரத்தியதால் தப்பி ஓடி வீட்டிற்குள் பதுங்கிய பிரபல ரவுடியை வீட்டின் கதவை உடைத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. கைக்குழந்தையுடன் தூங்கிய பெண் அலறியடித்து ஓடிய சம்பவத்தின் பயங்கரம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர் மோக்கா என்கிற மோகன் , ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வந்த இவர் மீது ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் 3 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ரவுடி போல கூட்டாளிகளுடன் சுற்றி வந்த மோகனுக்கும் புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த புறா என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று தன்னுடைய நண்பன் அருணாச்சலத்தின் மனைவி பிறந்த நாள் பார்டியில் பங்கேற்பதற்காக மோகன் தனது நண்பர்களுடன் கேக் வாங்கி கொண்டு நள்ளிரவு புதுப்பேட்டைக்கு சென்றுள்ளனர்.

மோகன் போலீசுக்கு சொன்ன தகவலால், புதுப்பேட்டை ரவுடி புறா செயின் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில், புதுப்பேட்டைக்கு மோகன் வந்து சென்றது புறாவின் கூட்டாளிகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

அவர்கள் மோகணை சுற்றி வளைக்க தேடி உள்ளனர். இதனைக் கேள்விப்பட்ட மோகன் ஆயிரம் விளக்கு பகுதியில் இருந்து தனது நண்பர்கள் 6 பேரை அழைத்து வந்து கத்தியை எடுத்துக் கொண்டு வாண்டடாக மீண்டும் புதுப்பேட்டை பகுதிக்கு கெத்து காட்ட சென்றுள்ளார்.

கொலை செய்யும் நோக்கத்துடன் காத்திருந்த புறாவின் கூட்டாளிகளிடம் வலிய சென்று சிக்கிய மோகனை , அவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் ஓட ஓட விரட்டி தாக்கி உள்ளனர்.

புதுப்பேட்டை அய்யாசாமி தெருவில் புகுந்து, பம்பிங் ஸ்டேஷன் தெருவுக்குள் குதித்து தப்பி ஓடிய மோகன், தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அந்த நள்ளிரவு நேரத்தில் அங்கிருந்த வீடு ஒன்றின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து பதுங்கி உள்ளான்.

அந்த வீட்டில் தனது கைகுழந்தையுடன் உறங்கிக் கொண்டிருந்த பெண் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்துள்ளார். அந்த பெண் எழுந்து வெளியில் ஓடி வருவதற்குள்ளாக கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே புகுந்த புறாவின் கூட்டாளிகள் மோகனை தாக்க ஆரம்பிக்க, பதறிப்போன அந்தப்பெண் தனது கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு அலறியபடியே வீட்டை விட்டு வெளியே வந்தார்
அதற்குள்ளாக அந்த பெண்ணின் வீட்டுக்குள் வைத்தே மோகனை கொலை செய்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த எழும்பூர் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில் புதுப்பேட்டை விக்ரம், விக்னேஷ், யூட்யூப் வெங்கடேசன், வசீகரன் மற்றும் ஒரு சிறுவன் என 5 பேர் கைது செய்யப்பட்டனர். நரேஷ் என்பவர் தலைமறைவாக உள்ளார்.

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கூலிப்படை ரவுடிகளின் அட்டகாசத்தை போலீசார் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments