விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசுப்பேருந்து ஜப்தி

விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசுப்பேருந்து ஜப்தி
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசுப்பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
2018-ம் ஆண்டு ஒத்தகுதிரை பேருந்து நிறுத்தம் அருகே அரசுப்பேருந்து மோதியதில் தாழக்கொம்புதூரை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு 3 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க கோபிசெட்டிபாளையம் மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அந்த தொகையை வழங்காததால் நீதிமன்ற உத்தரவுப்படி, கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் இருந்த அரசுப்பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
Comments