ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் உடல்களுக்கு இறுதிச்சடங்கு ; அஞ்சலி செலுத்த குவிந்த பொதுமக்கள்

0 2873
ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் உடல்களுக்கு இறுதிச்சடங்கு ; அஞ்சலி செலுத்த குவிந்த பொதுமக்கள்

கடலூரில், கெடிலம் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் உடல்களுக்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது. நேற்று கெடிலம் ஆற்று நீரில் மூழ்கி 4 சிறுமிகள், 3 பெண்கள் உயிரிழந்த நிலையில், அவர்களின் உடல்களுக்கு இன்று இறுதிச்சடங்கு நடைபெற்றது.

7 பேரில் 5 பேரின் உடல்கள் பண்ருட்டி அ.குச்சிபாளையம் கிராமத்தில் ஒரே இடத்தில் இறுதிச்சடங்கு நடைபெற்ற நிலையில், மீதமுள்ள 2 பேரின் உடல்களுக்கு குறிஞ்சிப்பாடி கிராமத்தில் இறுதிச்சடங்கு நடைபெற்றது. இறுதிச்சடங்கின் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்ட நிலையில், 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments