வடமாநிலங்களை வாட்டி வதைக்கும் வெப்ப அலை.. ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை மையம்.!

0 1840

வடமாநிலங்களில் அதீத வெப்ப அலை வீசி வரும் நிலையில், டெல்லிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஜூன் 4-ம் தேதி முதல் டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக வெப்ப அலை வீசி வருகிறது.

தற்போது  44 டிகிரி செல்சியஸ் முதல் 47 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவி வரும் நிலையில், அடுத்த 4 நாட்கள் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் கவனமுடன் வெளியே செல்ல வேண்டுமென வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments