மகன் தற்கொலையால் மன உளைச்சல்... கடலில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட பெற்றோர்கள்.!

0 4728

23 வயது மகன் தற்கொலை செய்து இறந்த துக்கம் தாங்காமல் வயது முதிர்ந்த பெற்றோர் உடலில் துணியை கட்டிக்கொண்டு ராமேஸ்வரம் கடலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டனர்.

உயிரிழந்தவர்கள் கோவை மாவட்டம் சமத்தூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி தனலெட்சுமி என்பது விசாரணையில் தெரியவந்தது.

62 வயதான ஆறுமுகம் பொள்ளாச்சியில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் பணியாற்றி இரண்டு மாதத்திற்கு முன்பு ஓய்வு பெற்றுள்ளார்.

59 வயதான அவரது மனைவி தனலெட்சுமி காதி கிராப்டில் பணியாற்றி வந்துள்ளார். மகன் கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்டதில் இருந்து இருவரும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே அவர்கள் இறப்பதற்கு முன்பு உறவினர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில், தங்களது சொத்துக்களை விற்று மகன் பெயரில் அறக்கட்டளை தொடங்கி மக்களுக்கு உதவி செய்யுமாறு தெரிவித்துள்ளனர்.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments