கடத்தப்பட்டு மீட்கப்பட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த இளைஞர் தந்தையுடன் கைது - ஏன்?

கடத்தப்பட்டு மீட்கப்பட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த இளைஞர் தந்தையுடன் கைது - ஏன்?
சேலம் அருகே 20 லட்சம் ரூபாய் கேட்டு கடத்தப்பட்டு மீட்கப்பட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த இளைஞர் அவரது தந்தையுடன் கைது செய்யப்பட்டார்.
பட்டை கோவில் பகுதியில் முல்லாராம் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். அவரது மகன் ஜெயராமை கடந்த 2-ஆம் தேதி மர்மகும்பல் கடத்திச் சென்றது. தனிப்படை அமைத்து தேடி வந்த போலீசார், பெங்களூரிலிருந்து ஜெயராமை மீட்டு சேலம் அழைத்து வந்தனர்.
அந்த கடையில் வேலை பார்த்து வந்த சன்வாலா ராம் என்பவர் பான் பராக்-குட்கா பொருட்கள் விற்பனையில் மோசடி செய்த பணத்தை பெறுவதற்காக தவறுதலாக ஜெயராமை கடத்தியது விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து, தனிப்படை போலீசாரின் தேடுதல் வேட்டையில் மளிகை கடையில் 50கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்ததையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்தனர்.
Comments