உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட புலி.. நீண்ட சிகிச்சைக்குப் பின் இயற்கை சார்ந்த கூண்டில் விடப்பட்டது..!

0 2246
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட புலி.. நீண்ட சிகிச்சைக்குப் பின் இயற்கை சார்ந்த கூண்டில் விடப்பட்டது..!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் பிடிக்கப்பட்ட புலி நீண்ட சிகிச்சைக்கு பின் இயற்கை சார்ந்த கூண்டில் விடப்பட்டது.

மானாம்பள்ளி வனச் சரகத்திற்கு உட்பட்ட முடிஸ் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புலி ஒன்று  உடல் நல குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து அந்த புலிக்கு அரசின் உத்தரவுப்படி  ரொட்டிக்கடை மனித வன உயிரின மோதல் தடுப்பு மையம் மற்றும் மானாம்பள்ளி நடைபயண ஓய்வு விடுதியில் வைத்து கடந்த 7 மாதங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது அந்த புலி குணம் அடைந்ததை அடுத்து மானாம்பள்ளி வனப்பகுதியில் அமைக்கபட்டுள்ள இயற்கை சார்ந்த புலிக்கூண்டில் விடப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments