நடிகர் சல்மான் கான், தந்தை சலீம் கானுக்கு கொலை மிரட்டல்

0 1925

நடிகர் சல்மான் கான், அவர் தந்தை சலீம் கான் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்மக் கடிதத்தால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பையின் பாந்த்ரா காவல்நிலைய போலீசார் அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். சல்மான் கானின் தந்தை சலீம் கான், ஷோலே போன்ற பல வெற்றிப்படங்களுக்கு கதை வசனம் எழுதியவர்.

அவர் தினமும் நடைப்பயிற்சி செய்து அமரும் இடத்தில் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் சல்மான் கானையும் அவரையும் பஞ்சாப் பாடகர் மூசாவாலாவைப் போல் சுட்டுக் கொல்லப்போவதாக அக்கடிதத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments