நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து.. கட்சியில் இருந்து இரண்டு பேரை நீக்கியது பாஜக தலைமை..!

0 2856
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து.. கட்சியில் இருந்து இரண்டு பேரை நீக்கியது பாஜக தலைமை..!

நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கட்சியினர் 2 பேர் பாஜக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

பாஜகவின் செய்தித் தொடர்பாளரான நுபுர் சர்மா, மற்றும் பாஜகவின் டெல்லி ஊடகப் பிரிவுத் தலைவர் நவீன் ஜின்டால் ஆகியோர் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசியதற்கு கத்தார், குவைத் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நுபுர் சர்மா கட்சியில் இருந்து இடைநீக்கமும், நவீன் ஜிண்டால் நீக்கமும் செய்யப்பட்டனர். எந்த மதத்தையும் அவமதிப்பு செய்வதை பாஜக ஆதரிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வரவேற்பதாக குவைத் வெளியுறவு துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments