நடிகர் ஷாருக்கானுக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி..!

0 1439
நடிகர் ஷாருக்கானுக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி..!

பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டார்.

மேற்கு வங்கத்தின் சிறப்புத் தூதுவரான ஷாருக்கான் விரைவில் குணமடைய வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் இயக்குனர் கரண் ஜோகர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஷாருக்கான் தமது மனைவி கௌரி மற்றும் மகன் ஆர்யான் ஆகியோருடன் கலந்து கொண்டார்.அதன் பிறகு அவருக்கு கோவிட் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே நடிகை கத்ரினா கைப்புக்கும் கோவிட் உறுதி செய்யப்பட்டதால் அவர் அபுதாபியில் நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவுக்கு செல்ல இருந்த பயணத்தை ரத்து செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments