அமெரிக்காவில் இரு வேறு நகரங்களில் மர்ம கும்பல் துப்பாக்கிச் சூடு - 7 பேர் படுகொலை

0 1360

அமெரிக்காவில் இரு வேறு நகரங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

டென்னஸ்ஸி மாகாணத்தில் இரவுநேர கேளிக்கை விடுதி அருகே மர்ம கும்பல் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர். 14 பேர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிக்க தலைதெறிக்க ஓடிய மக்கள் வாகனங்களில் அடிபட்டு படுகாயமடைந்தனர்.

அதேபோல் பென்சிலிவேனியா மாகாணத்தில் பிலடெல்பியா நகரில், இரவுநேர பஜாரில் புகுந்த மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments