தேவாலயத்தில் திடீரென நுழைந்த மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு... குழந்தைகள் உட்பட 50 பேர் உயிரிழப்பு

0 2657

தென்மேற்கு நைஜீரியாவின் ஓவோ நகரத்தில் உள்ள தேவாலயத்தில் திடீரென நுழைந்த மர்மநபர்கள் சுற்றி இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டதில், 50 பேர் உயிரிழந்தனர்.

செயின்ட் ஃபிரான்சிஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் நடைபெற்ற ஞாயிறு ஆராதனையில், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அங்கு புகுந்த மர்மநபர்கள் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், வெடி பொருட்களையும் வெடிக்க செய்துவிட்டு தப்பியோடி விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 50 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments