சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து - 25 பேர் உயிரிழப்பு

0 1246

உத்தரகண்டில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 25 பேர் உயிரிழந்தனர்.

மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டத்திலிருந்து 28 பக்தர்களுடன், உத்தரகண்டின் யமுனோத்ரி நோக்கி பேருந்து புறப்பட்டு சென்றது. டாம்டா அருகே உள்ள மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 25 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரமும் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments