பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. இளைஞர் உட்பட 7 பேர் கைது.!

0 4367

நாமக்கல் மாவட்டம் ஆயில்பட்டியில், 10ம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற இளைஞர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

வடகாடு பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்ற இளைஞருக்கும் 10ம் வகுப்பு மாணவிக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அதன் பிறகு, செல்போன் மூலம் மாணவியுடன் கந்தசாமி பேசி வந்ததாக கூறப்படும் நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் மாணவியின் ஊருக்கு சென்று அவரை கடத்த முயன்றுள்ளார்.

அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுக்கவே, கந்தசாமியையும் கடத்தலுக்கு உடந்தையாக அவனது நண்பர்கள் 6 பேரையும் போலீசார் பிடித்தனர்.

விசாரணையில், மாணவியை கடத்தி திருமணம் செய்ய முயன்றதாக கந்தசாமி ஒப்புக்கொண்டான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments