சாலையில் சென்ற போது திடீரென தீப்பிடித்து எரிந்த இன்னோவா.. காருக்குள் சிக்கிக்கொண்ட நபர் மயங்கிய நிலையில் மீட்பு..!

0 2476

சென்னையில் சாலையில் சென்ற போது திடீரென தீப்பிடித்து எரிந்த காருக்குள் சிக்கிகொண்ட நபரை பலத்த தீக்காயங்களுடன் மக்கள் மீட்டனர்.

கனேசன் என்பவர் தான் அண்மையில் வாங்கிய டொயோட்டா இன்னோவா காரில் உறவினர் வீட்டிற்கு சென்ற போது இஞ்சின் பகுதியில் பலத்த சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக தீப்பற்றி எரியத் தொடங்கிய காரில் இருந்து அவர் வெளியேற முற்பட்ட போது, காரின் ஸ்மார்ட் லாக் வசதி தானாக இயங்கி கதவுகள் மூடிக்கொண்டதாக கூறப்படுகிறது.

புகை வந்ததும் தானாக திறந்து கொண்ட காரில் இருந்து மயங்கிய நிலையில் மக்கள் கனேசனை மீட்டனர். 60 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். புதிய கார் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments