இம்ரான் கானை கொல்ல சதித்திட்டம் என்ற வதந்தியால் பதற்றம்.!

0 1844

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை படுகொலை செய்ய சதித்திட்டம்  குறித்த வதந்திகள் பரவியதால் Bani Gala பகுதியில் பதற்றம் நீடிக்கிறது.

இங்கு பிரச்சாரம் செய்ய இம்ரான் கான் வரும் போது அவரைக் கொல்ல திட்டமிடப்பட்டிருப்பதாக செய்திகள் பரவின. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அருகில் உள்ள முக்கியப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத் உள்ளிட்ட சில நகரங்களில் 144 தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இம்ரான் கானுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments