பஞ்சாபில் பொதுமக்கள் மத்தியில் இளைஞர் ஒருவரை ஓட ஓட விரட்டி மர்மகும்பல் வெட்டிக் கொலை செய்த சிசிடிவி காட்சி.!

0 2246

பஞ்சாபின் மோகா மாவட்டத்தின் சந்தைப் பகுதியில் இளைஞர் ஒருவரை ஓட ஓட விரட்டி மர்மகும்பல் வெட்டிக் கொலை செய்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

2 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தேஷ்ராஜ் என்ற இளைஞரை விரட்டியுள்ளனர்.

இந்த கும்பலைக் கண்டு சந்தைக்குள் ஓடிவரை பின் தொடர்ந்து விரட்டி வந்த கும்பல் முகம், உடல் என பல இடங்களில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

முன்விரோதம் காரணமாக பழிவாங்கும் நோக்கில் இந்த கொலைச் சம்பவம் அரங்கேறி உள்ளதாக போலீசார் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments