செங்கல்பட்டில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி.. தலைமறைவாக இருந்தவரை மடக்கி பிடித்த பொதுமக்கள்.!

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் ஏலச்சீட்டு நடத்தி 2கோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவான நபர் ஓரகரடம் பகுதியில் இருப்பதை அறிந்த பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பொத்தேரியைச் சேர்ந்த மூர்த்தி- புனிதா தம்பதியினரிடம் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் ஏலச்சீட்டு கட்டியுள்ளனர்.
கொரோனா ஊரடங்கின் போது ஏலச்சீட்டு பணத்தை முறையாக பலர் கட்டாததால் மூர்த்தியால் மற்றவர்களுக்கு பணம் அளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், 2 கோடி ரூபாயுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்பத்துடன் தலைமறைவாகியிருந்தார்.
Comments