தலையில்லா முண்டத்தால் கொலைகார காதலியை தட்டி தூக்கிய போலீஸ்..! நீயூ IN ஓல்டு OUT..!

0 6762
தலையில்லா முண்டத்தால் கொலைகார காதலியை தட்டி தூக்கிய போலீஸ்..! நீயூ IN ஓல்டு OUT..!

பூந்தமல்லி அருகே எரிக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட தலையில்லா முண்டத்தை வைத்து கொலை வழக்கை திறம்பட துப்பு துலக்கிய திருவேற்காடு போலீசார் பெண்ணையும் அவரது காதலனையும் கைது செய்துள்ளனர்.

பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கத்திலிருந்து கன்னப்பாளையம் செல்லும் சாலையின் ஒரம் உள்ள குப்பை மேட்டின் அருகே தலை மற்றும் இரண்டு கைகள் இல்லாமல் ஒரு ஆண் சடலம் கொலை செய்யப்பட்டு எரிந்த நிலையில் கிடந்தது. திருவேற்காடு போலீசார் அந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிரமாக விசாரணையை முன்னெடுத்தனர்.

விசாரணையில் கொல்லப்பட்டது மாங்காடு சாதிக் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சிராஜுதீன் என்பதை கண்டறிந்த போலீசார், கொலையாளிகளை கண்டறிய 4 தனிப்படைகள் அமைத்து பல்வேறு பகுதியில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

ஆட்டோ ஓட்டுனர் சிராஜூதின், தனது காதலி ஜூனத் என்பவருடன் சேர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு துணை நடிகை ஒருவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து சிராஜூதினின்காதலி ஜூனத்தை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். சம்பவத்தன்று சிராஜூதீன் பூந்தமல்லியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு காதலி ஜூனத் வீட்டிற்கு சென்றதும் அதன் பிறகு காலையில் அங்கிருந்து ஆட்டோ கிளம்பி வெளியே சென்றதும் தெரியவந்தது.

சிராஜுதீன் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆட்டோ ஆவடிக்கு சென்றது எப்படி? அதன் நம்பரை அழித்தது யார்? போன்ற சந்தேகம் எழுந்தது.

காதலி ஜூனத்திடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் சிராஜுதீன் கொலைக்கான மர்மம் வெளிச்சத்திற்கு வந்தது. ஆட்டோ ஓட்டுனர் சிராஜூதினுடன் தொடர்பில், துணை நடிகை கொலைக்காக ஜூனத்திடம் இருந்து அதிக அளவில் பணத்தை வாங்கி உள்ளான்.

இடையில் ஜூனத்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட போது பணத்தை திரும்ப கேட்டதால், அவர் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். அவ்வப்போது ஜூனத் வீட்டிற்கு சென்ற சிராஜூதின் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் ஜூனத்திற்கு மகேஷ் என்பவருடன்புதிதாக காதல் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று புதிய காதலன் மகேஷ், ஜூனத் வீட்டில் இருந்த போது, பழைய காதலன் சிராஜூதீன் போதையில் வீட்டுக்குள் புகுந்து வம்பு செய்துள்ளார்.

இதில் மகேஷ் சரமாரியாக தாக்கியதில் சிராஜூதின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் இதையடுத்து சிராஜிதீன் உடலை அங்கிருந்து எப்படி அப்புறப்படுத்துவது? என யோசித்த போது தலை மற்றும் கைகளை வெட்டி தனியாகவும், உடலை தனியாகவும் எரித்து விடலாம் என முடிவு செய்த கொலையாளிகள் சிராஜூதின் தலை மற்றும் இரண்டு கைகளையும் துண்டாக வெட்டி மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்று திருமழிசை பகுதியில் தீ வைத்து எரித்துள்ளனர் என்றும் ஆட்டோவில் சிராஜூதின் உடலை எடுத்து கொண்டு குப்பை மேட்டில் போட்டு உடலை தீ வைத்து கொளுத்தி விட்டு ஆட்டோவின் நம்பர்களை அழித்து விட்டு ஆவடியில் ஒரு பகுதியில் விட்டு சென்றது தங்கள் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து கொலைகார ஜோடிகளான மகேஷ் மற்றும் ஜுன்னத்தை கைது செய்த திருவேற்காடு போலீசார் தலை மற்றும் கைகள் எரிக்கப்பட்ட இடத்தில் தடயங்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் முறையான துப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில் ஆட்டோ சென்ற சிசிடிவி காட்சிகளை வைத்தே போலீசார் சாமர்த்தியமாக துப்பு துலங்கியது குறிப்பிடத்தக்கது.

தலை மற்றும் கைகள் கிடைக்கவில்லை என்றாலும் டி.என்.ஏ. பரிசோதனையின் அடிப்படையில் சிராஜூதின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments