ஜோ பைடன் ஓய்வு மாளிகை அருகே பறந்த விமானத்தால் பரபரப்பு.!

0 1464

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஓய்வெடுக்கும் கடற்கரை ஓர மாளிகை அருகே சிறிய விமானம் ஒன்று தவறுதலாகப் பறந்ததால் பாதுகாப்பு கருதி அதிபரும் அவர் குடும்பத்தினரும் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டனர்.

ஆனால் ஜோ பைடனுக்கு ஆபத்து ஏதுமில்லை என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து நிலைமை ஆய்வு செய்யப்பட்டதாகவும் அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் அந்த விமானம் தவறாக புகுந்துவிட்டதை உறுதி செய்தபின்னர் அந்த விமானம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அந்த விமானத்தின் விமானியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர் விமானத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை ஏன் பொருட்படுத்தவில்லை என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments