ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையில் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு.!

0 1511

ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தளத் தலைவருமான நவீன் பட்நாயக் கட்சியை வலுப்படுத்தும் வகையில், தமது அமைச்சரவையை இன்று மாற்றியமைக்கிறார்.

இதற்காக அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவியை நேற்று ராஜினாமா செய்தனர். ஒடிசாவில், வரும் 2024 ஆம் ஆண்டில் நடக்க உள்ள மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல்களுக்கு தயாராகும் வகையில் முதல்வர் நவீன் பட்நாயக் அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்பட உள்ளது.

சட்டசபை சபாநாயகர் சூர்ய நாராயண பட்ரோவும் தன் பதவியை ராஜினாமா செய்தார்.பல புதிய முகங்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க நவீன் பட்நாயக் திட்டமிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments