வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட தமிழக கோயில்களின் சிலைகள் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் நாளை ஒப்படைப்பு.!

0 1477

வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட தமிழக கோயில்களின் 10 ஐம்பொன் சிலைகள், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் நாளை ஒப்படைக்கப்பட உள்ளன. இதற்காக சிலைகள் அனைத்தும் நேற்றிரவு கும்பகோணம் சிலை திருட்டு தடுப்பு காவல் துறை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன.

புன்னைநல்லூர் கைலாசநாதர் கோவில் நடராஜர் சிலை, ஆழ்வார்குறிச்சி நரசிங்க நாதர் கோவில் கங்காள மூர்த்தி சிலை, நந்திகேஸ்வரர் சிலை, சுத்தமல்லி வரதராஜ பெருமாள் கோவில் விஷ்ணு சிலை உள்ளிட்டவை பல்வேறு காலகட்டங்களில் களவாடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்டன.

இச்சிலைகள் பற்றி உரிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மேற்கொண்ட தொடர் நடவடிக்கையால் அமெரிக்காவில்  இருந்து 6 சிலைகளும் , ஆஸ்திரேலியாவில் இருந்து 4 சிலைகளும் மீட்கப்பட்டன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments