கொள்ளிடம் ஆற்றில் பாலம் கட்டும் பணி செய்து வந்த நபர் சடலமாக மீட்பு..!

0 2233

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே ஆற்றில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி செய்து வந்த நபர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதனூர் குமாரமங்கலம் இடையே கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலத்திற்கான கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த சீப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் நேற்று வேலைக்கு சென்று வீடு திரும்பாத நிலையில், கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் மர்மமான முறையில் தலையில் காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, உடலை கைப்பற்ற வந்த போலீசாரை முற்றுகையிட்ட அறிவழகனின் உறவினர்களும், பொதுமக்களும் உடலை எடுக்க விடாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments