கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்மாற்றில் தலைக்குப்புற சொருகிய பைக்.. சிறு காயங்களுடன் உயிர்த் தப்பிய இளைஞர்..!

0 2202
கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்மாற்றில் தலைக்குப்புற சொருகிய பைக்.. சிறு காயங்களுடன் உயிர்த் தப்பிய இளைஞர்..!

கேரளாவின் வெள்ளியாங்குழி பகுதியில் சாலையோரத்தில் இருந்த மின்மாற்றியில் இருசக்கர வாகனம் ஒன்று தலைக்குப்புற சொருகி இருந்ததை கண்டு பொதுமக்கள் குழப்பமடைந்தனர்.

இதுகுறித்து அப்பகுதியில் இருந்த சிசிடிவிக் காட்சிகளை ஆய்வு செய்ததில் இளைஞர் ஒருவர், அதிவேகமாக பைக்கில் வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டதும், பைக் பல முறை சுழன்று சாலையோரத்தில் இருந்த மின்மாற்றியில் சொருகியதும் தெரியவந்தது.

தகவலறிந்து வந்த மின் ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து மின்மாற்றியில் இருந்த பைக்கை அகற்றிய நிலையில் பைக்கின் பதிவு எண் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments