போட்டோவுக்கு போஸ் கொடுக்காததால் இப்படியா செய்வது.. நடிகர் பாலகிருஷ்ணா செயலுக்கு ரசிகர்கள் திட்டி விமர்சனம்..!

0 3608
போட்டோவுக்கு போஸ் கொடுக்காததால் இப்படியா செய்வது.. நடிகர் பாலகிருஷ்ணா செயலுக்கு ரசிகர்கள் திட்டி விமர்சனம்..!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் என்.டி ராமாராவின் மகனும், அரசியல்வாதியுமான நந்தமுரி பாலகிருஷ்ணா.

இவரது படங்களில் ரயில் முன் பாய்ந்து தாண்டி செல்வது, துப்பாக்கி குண்டுகளை கடித்து துப்புவது போன்ற ஏராளமான காட்சிகளில் நடித்துள்ளார். சமீபத்தில் பாலகிருஷ்ணா நடித்த அகண்டா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது ஆந்திர மாநிலம் இந்துப்பூர் தொகுதி எம்.எல்.ஏவான பாலகிருஷ்ணா, தனது ரசிகர் மன்ற தலைவர் வீட்டு புதுமனை புகு விழாவில் பங்கேற்றார்.

ரசிகர்கள் பலர் பாலகிருஷ்ணாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த போது, தந்தையின் தோளில் குழந்தை ஒன்று உறங்கிக் கொண்டிருந்தது.

இதனை அடுத்து, அந்த குழந்தையின் முதுகில் லேசாக தட்டி எழுப்பி கண் விழிக்க வைத்து பாலகிருஷ்ணா போஸ் கொடுத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments