திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் 3 கொலைகள்... போலீசார் விசாரணை!

0 2813

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் 3 கொலைகள் அரங்கேறியுள்ளது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் முருகபவனம் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் வேலை செய்து வரும் பிரபாகர் என்பவரை மர்ம நபர்கள் சிலர் வீடு புகுந்து கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

அதேபோல், ஊர் பொது பிரச்சினை தொடர்பாக இருந்து வந்த முன் விரோதத்தால், கதிரயன் குளம் பகுதியைச் சேர்ந்த சிவாவை  முத்துக்குமார் என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்த நிலையில் அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பழனி அருகே சொத்து தகராறு காரணமாக சொந்த தம்பியை நுங்கு வெட்டும் அரிவாளால் வெட்டிக் கொன்ற அண்ணனை பழனி தாலுகா போலீசார் தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments