ஆதனூர் கிராமத்தில் பொதுமக்கள் பயணிக்க இலவச ஆட்டோ வசதி.. ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் இயக்கம்..!

0 3029
ஆதனூர் கிராமத்தில் பொதுமக்கள் பயணிக்க இலவச ஆட்டோ வசதி.. ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் இயக்கம்..!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் பொதுமக்கள் பயணிக்க இலவச பேட்டரி ஆட்டோ வசதியை, ஊராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

பேருந்துகள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வருவதால் வேலைக்கு செல்லவும், பள்ளி, கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைக்கு செல்வதற்கும் பொதுமக்கள் சிரமமடைந்து வந்துள்ளனர்.

இதனை கருத்தில் கொண்டு ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் 7 பேட்டரி ஆட்டோக்கள் வாங்கப்பட்டு காலையில் நான்கு மணி நேரமும், மாலையில் நான்கு மணி நேரமும் என நாளொன்றுக்கு எட்டுமணி நேரம் வரை இயக்கப்பட்டு வருகிறது. அதில் பயணிக்க ஆதார் அட்டை நகல் கொடுத்து பாஸ் பெற வேண்டியது கட்டாயம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments