மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி-யின் 76-வது பிறந்த தினம்.. நினைவிடத்தில் மனைவி, மகன் அஞ்சலி..!

0 8441
மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி-யின் 76-வது பிறந்த தினம்.. நினைவிடத்தில் மனைவி, மகன் அஞ்சலி..!

மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபியின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மனைவி சாவித்ரி, மகன் சரண் ஆகியோர் நினைவஞ்சலி செலுத்தினர்.

அப்போது 6 டன் எடையுள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ள எஸ்பிபியின் உருவப்படத்தை அவரது மகன் சரண் திறந்து வைத்தார்.

நினைவிடத்தில் தந்தைக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான பணிகளை அடுத்த வருடம் தொடங்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.

எஸ்பிபியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த ரசிகர்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments