வெள்ளி மாலையில் இரு பிரிவினரிடையே கல்வீசித் தாக்குதல்.. வன்முறை தொடர்பாக 36 பேர் கைது..!

0 1751
வெள்ளி மாலையில் இரு பிரிவினரிடையே கல்வீசித் தாக்குதல்.. வன்முறை தொடர்பாக 36 பேர் கைது..!

உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக 36 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கான்பூரில் வெள்ளி மாலையில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் காவல்துறையினர் 13 பேரும், இரு பிரிவுகளையும் சார்ந்த 30 பேரும் காயமடைந்தனர். கூடுதல் காவல்படையினர் வந்ததும் மோதலை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

bமோதல் தொடர்பாகப் பதிவான வீடியோவில் வன்முறையில் ஈடுபட்டோரை அடையாளம் கண்ட காவல்துறையினர் இதுவரை 36 பேரைக் கைது செய்துள்ளனர். மீண்டும் மோதல் ஏற்படாமல் தடுக்கக் காவல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments