மாணவிகள் பேருந்தில் தான் தொங்கிட்டு போவோம்..! அடம் பிடித்த அராத்துக்கள்..! பேருந்துகளுக்கு பற்றாக்குறையா?

0 7711
மாணவிகள் பேருந்தில் தான் தொங்கிட்டு போவோம்..! அடம் பிடித்த அராத்துக்கள்..! பேருந்துகளுக்கு பற்றாக்குறையா?

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மாணவிகளுக்காக இயக்கப்பட்ட அரசு பேருந்தில் ஏறிய  இரு மாணவர்கள் இறங்கச்சொன்ன நடத்தினரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ வெளியாகி உள்ளது. மகளிர் பேருந்தில் தான்செல்போம் என்று உரிமைக்குரல் எழுப்பிய வம்பர்கள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சுற்றுவட்டாரப் பகுதி கிராம மாணவர்கள் திண்டிவனத்தில் செயல்பட்டு வரும் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் படிப்பதற்காக அரசு பேருந்துகளில் ஏறி செல்வது வழக்கம்.

அவ்வாறு அரசுப் பேருந்துகளில் அளவுக்கு அதிகமாக மாணவ, மாணவிகள் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டால் போக்குவரத்து கழகத்தின் சார்பாக சிறப்பு பேருந்து இயக்கப்படும்.

அந்தவகையில் மாணவிகளுக்காக பிரத்யேகமாக இயக்கப்பட்ட சிறப்பு பேருந்து ஒன்றில் 4 மாணவர்களை பேருந்தில் இருந்து நடத்துனர் இறங்க சொன்னவாறே வீடியோ எடுக்க தொடங்கியதும் இருவர் அங்கிருந்து சென்று விட , 2 மாணவர்கள் மட்டும் பேருந்தை விட்டு செல்ல மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பேருந்து நடுவழியில் நின்றது.

நடத்துனருடன் வாக்குவாத்தில் ஈடுப்ட்ட வடப்புத்தூர் கிராமத்தை சேர்ந்த மாணவன் , கூடுதல் பேருந்து இயக்கினால் நாங்க எதற்கு இந்த பேருந்தில் தொங்க போகிறோம் என்று கேள்வி எழுப்பினார்

பெண்களுக்காக இயக்கப்படும் பேருந்தில் ஆண்கள் ஏறுவதற்கு அனுமதி இல்லை, நீங்கள் இருவரும் ஆண்கள் தானே என்று நடத்துனர் மடக்க முயல அதற்கும் லந்து கொடுத்தபடி பேருந்து அருகேயே நின்று கொண்டு இருந்தனர்

ஏற்கனவே அந்த மகளிர் பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிந்ததால் மாணவிகள் படியில் நின்று பயணம் செய்தனர், மாணவர்களும் தொங்கினால் பெண்களுக்கு அசவுகரியமாக இருக்கும் என்பதால் மாணவர்களை இறக்கிவிட்டதாக நடத்துனர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments