உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையின் 100-வது நாள் நினைவாக ராக்கெட் ஏவியது ரஷ்யா.!

0 2297

உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையின் 100-வது நாள் நினைவாக டான்பாஸ் சரக்கு ராக்கெட்டை ரஷ்யா விண்ணில் செலுத்தியது.

உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் இருந்து பிரிந்த பகுதிகளின் நினைவாக ராக்கெட்டுக்கு டான்பாஸ் என ரஷ்யா பெயரிட்டுள்ளது. கஜகஸ்தானில் உள்ள Baikonur cosmodrome ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றது.

விண்வெளி மையத்திற்கு தேவையான அறிவியல் உபகரணங்கள், எரிபொருள், தண்ணீர் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்றது. ராக்கெட்டில் ரஷ்யக் கொடியுடன் சேர்த்து டானட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் குடியரசுகளின் கொடிகளும் பொருத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments