புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண், பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பலி.!

0 3510

புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண், பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த நிகழ்வு குறித்து கண்காணிப்பு கேமரா காட்சியின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அங்கன்வாடி உதவியாளராக பணியாற்றி வந்த ராஜவள்ளி என்பவர், பணிக்கு செல்ல ரெட்டியார்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தனியார் பேருந்தை அவர் முந்த முயன்றதாக கூறப்படும் நிலையில், எதிர்பாராவிதமாக பேருந்து உரசியதில், நிலைதடுமாறி கிழே விழுந்தது அதன் சக்கரத்தில் சிக்கினார்.

இதில், ராஜவள்ளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments