திருப்பூரில் குடிபோதையில் நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை.!

0 2347

திருப்பூரில் குடிபோதையில் நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

சந்திராபுரத்தில் உள்ள டாஸ்மாக்கில் செவந்தபாளையத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே பயங்கர தகராறு நடந்துள்ளது.

பின்னர் சிறிது நேரம் கழித்து டாஸ்மாக் அருகே சுரேஷ் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்த பொதுமக்கள் நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு சென்ற போலீசார் சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தப்பியோடிய 5 பேரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments