ராஜஸ்தானில் 120 அடி ஆழக் கிணற்றில் சிக்கியவர் உயிருடன் மீட்பு.!

0 2089

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் 120 அடி ஆழக் கிணற்றில் கட்டுமானப் பணியின்போது சிக்கிக் கொண்டவரை ராணுவத்தினரும் பொதுமக்களும் இணைந்து உயிருடன் மீட்டு வெளியே கொண்டுவந்துள்ளனர்.

கட்டுமானப் பணியின்போது செங்கற்கள் சரிந்து ஒருவர் சிக்கிக் கொண்டது பற்றித் தகவல் அறிந்ததும் ராணுவப் பொறியாளர் குழுவினர் விரைந்து வந்து கயிறு கட்டி மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பகலிரவாக முயன்று 10 மணி நேரத்துக்குப் பின் தொழிலாளரை உயிருடன் மீட்டுக்கொண்டு வந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments