சென்னையில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட நபருக்கு கத்தி குத்து..!

0 2181

சென்னையில், வீட்டிற்கு வெளியே மது அருந்தியதை தட்டிக்கேட்ட நபரை கத்தியால் குத்திய வங்கி மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

ஆட்டோ ஓட்டுநரான சுரேஷ், பெரவள்ளூரில், ஒரு வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

வீட்டு உரிமையாளரின் பேரனும், தனியார் வங்கி மேலாளருமான விஜய், தினமும் இரவில் வீட்டிற்கு வெளியே நண்பர்களுடன் மது அருந்தி வந்ததை சுரேஷ் கண்டித்ததால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில், வியாழன் மாலை விஜய் சுரேஷை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.

சுரேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதே பகுதியில் சுற்றி திரிந்த விஜயை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments