பைக் அழகாக உள்ளது, செல்பி எடுக்க வேண்டும் என கூறி பைக்கை திருடி சென்ற திருடர்கள்.!

0 2857

சென்னையில் நடனக் கலைஞரிடம் லிப்ட் கேட்டு பைக்கில் சென்ற திருடர்கள், பைக் அழகாக உள்ளது, செல்பி எடுக்க வேண்டும் என கூறி அதனை திருடிச் சென்றனர்.

கோடம்பாக்கத்தை சேர்ந்த சரண்ராஜ் என்பவர் சென்டிரல் ரயில் நிலையத்தில் நிறுத்தி இருந்த தனது ஹோண்டா சிபிஆர் வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரிடம் லிப்ட் கேட்ட 2 இளைஞர்களை சரண் ராஜ், எழும்பூர் காந்தி - இர்வின் பாலத்தில் இறக்கிவிட்டுள்ளார்.

பின்னர், அவர்கள் பைக்குடன் செல்பி எடுக்க வேண்டும் என கூறியதை நம்பி, சரண் ராஜும் போஸ் கொடுத்துள்ளார். லிப்ட் கேட்டவர்களில் ஒருவர் பைக்கில் அமர்ந்து போஸ் கொடுத்தபோது, திடீரென சரண்ராஜை கீழே தள்ளி விட்டு, மற்றொருவரும் பைக்கில் ஏறி தப்பினர்.

இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், சசிகுமார் என்பவரை கைது செய்து, வாகனத்தை பறிமுதல் செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments