தனியார் நிறுவனத்தில் நச்சு வாயு கசிவு.. பணியில் இருந்த 87 பெண்களுக்கு வாந்தி, மயக்கம்!

0 1508

ஆந்திராவில், தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவில் சிக்கிய 87 பெண்கள் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விசாகப்பட்டினத்தின் அட்சிதாபுரத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது.

இதனால், அங்கு பணியில் இருந்த பெண்கள் மற்றும் அருகில் உள்ள நிறுவனத்தில் பணியில் இருந்த பெண்கள் என 87 பேருக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. 

தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ள நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments