ஆசிரியர்கள் வராததால் விடைத்தாள் திருத்தும் பணியில் பாதிப்பு.. பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை.!

0 2784

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை விடுவிக்காத அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு, போதிய ஆசிரியர்கள் வராததால் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களை உடனடியாக தலைமை ஆசிரியர்கள் விடுவிக்க அனுமதி தர வேண்டும் என அறிவுறுத்திய பள்ளி கல்வித்துறை, ஆசிரியர்கள் பணிக்கு வராமல் இருந்தால் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பு என தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments