கர்நாடகாவில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பற்றி விபத்து - 7 பேர் பலி
கர்நாடக மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் டெம்போ மீது மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பற்றி எரிந்ததில், 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
32 பயணிகளுடன் கோவாவில் இருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்ற பேருந்து, கலபுராகி பகுதியில் எதிரே வந்த சரக்கு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சுமார் 50 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததில், பெட்ரோல் டேங்க்கில் கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பற்றியது. பேருந்துக்குள் சிக்கிய 7 பயணிகள் உடல்கருகி சம்பவ இடத்திலேயெ உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த மற்ற பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments