சிக்கன் தந்தூரி சாப்பிட்ட மாணவன் உயிரிழந்த விவகாரம்... உணவகத்தை தற்காலிகமாக மூட உத்தரவு.!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சிக்கன் தந்தூரி சாப்பிட்ட 12ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவனின் தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆரணியைச் சேர்ந்த கணேஷ் என்பவரது மகன் திருமுருகன் கடந்த 24ம் தேதி 5 ஸ்டார் எலைட் என்ற உணவகத்தில் சிக்கன் தந்தூரி, பிரைட் ரைஸ் வாங்கி சாப்பிட்ட நிலையில், வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டதால் தொடர் சிகிச்சையில் இருந்து வந்த மாணவன் கடந்த 29ம் தேதி உயிரிழந்தார்.
இதையடுத்து அந்த உணவகத்தில் ஆய்வு செய்த அதிகாரிகள், தற்காலிகமாக உணவகத்தை மூட உத்தரவிட்டனர்.
Comments