உத்திர பிரதேசத்தில் யூ டியூப் பார்த்து வெடிகுண்டு தயாரித்து நபர் கைது.!

0 1908

உத்திர பிரதேசத்தில், கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட பக்கத்து வீட்டுக்காரரை, யூ டியூப் பார்த்து வெடிகுண்டு தயாரித்து, அதை வைத்து கொல்ல முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

பிஜ்ரோல் கிராமத்தைச் சேர்ந்த ரன்வீர், காமேஷ் என்பவரிடம் 4 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். காமேஷ் பணத்தை திருப்பிக் கேட்டதால் ஆத்திரமடைந்த ரன்வீர், காமேஷ் வீட்டின் கேட்டில் வெடிகுண்டை கட்டி வைத்த நிலையில், அது வெடித்து சிதறி காமேஷின் மகன் படுகாயம் அடைந்துள்ளார்.

போலீசார் விசாரித்ததில், 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் ரன்வீர், யூ டியூப் பார்த்து வெடிகுண்டு தயாரித்ததும் அதை தயாரிப்பதற்கு தேவையான கந்தகம், பொட்டாஷ், பேட்டரிகளை சந்தையில் வாங்கியதும் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments