காரைக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை.!

0 2196

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 65 பவுன் தங்க நகைகள், வைர நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

சுப்பிரமணியபுரத்தில் வசித்து வரும் ஐயப்பன் என்பவர் மனைவியுடன் ஊருக்கு சென்றிருந்த நிலையில் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக அழகப்பாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன் பேரில் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்ட போது சிசிடிவி காட்சிகள் பதிவாகும் ஹார்ட் டிஸ்க் என நினைத்து கொள்ளையர்கள் வைஃபை மோடத்தை எடுத்துச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி, கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments