உயர் மின்னழுத்த ஒயர்கள் மீது கண்டெய்னர் லாரி உரசி தீவிபத்து.. ரூ.50லட்சம் மதிப்பிலான டயர்கள் தீயில் எரிந்து நாசம்..!

0 2723
உயர் மின்னழுத்த ஒயர்கள் மீது கண்டெய்னர் லாரி உரசி தீவிபத்து.. ரூ.50லட்சம் மதிப்பிலான டயர்கள் தீயில் எரிந்து நாசம்..!

திருவள்ளூர் அருகே உயர் மின்னழுத்த ஒயர்கள் மீது கண்டெய்னர் லாரி உரசி தீப்பிடித்ததில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான டயர்கள் எரிந்து நாசமாயின.

மணவாளநகரில் இருந்து 2 கோடி ரூபாய் மதிப்புள்ள எம்ஆர்எப் டயர்களை ஏற்றிக் கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று ஜெய்ப்பூர் சென்று கொண்டிருந்தது.

கேட்டர்பில்லர் கம்பெனி அருகே சாலையோரத்தில் இருந்த உயரழுத்த மின்சார வயர்கள் உரசியதில் கண்டெய்னர் லாரி தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

தீயணைப்புத்துறையினர் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தபோதும் லாரியின் முன்பகுதி எரிந்து சேதமடைந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments