2 வெளி மாநிலத் தொழிலாளர்களை சுட்ட தீவிரவாதிகள்.. ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்..!

2 வெளி மாநிலத் தொழிலாளர்களை சுட்ட தீவிரவாதிகள்.. ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்..!
ஜம்மு காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் வங்கி மேலாளரை சுட்டுக் கொன்ற சம்பவத்தை அடுத்து தீவிரவாதிகள் இரண்டு வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்தார்.
இன்னொருவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களால் காஷ்மீரில் வெளிமாநிலத்தவர், பண்டிட் இனத்தவர் ஆகியோரை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த வரிசையில் செங்கல் சூளையில் பணியாற்றிய இரண்டு வெளிமாநிலத் தொழிலாளர்கள் நேற்று சுடப்பட்டனர்.
Comments