ஓ.. இப்படித்தான் குழந்தை வரம் கொடுக்கிறார்களா? 16 வயது சிறுமியும் விபரீத தாயும்..!

0 14828

16 வயது சிறுமியை 22 வயது பெண் என்று பொய் சொல்லி மருத்துவமனையில் கட்டாயப்படுத்தி கருமுட்டை தானம் செய்ய வைத்த தாய் மற்றும் தாயின் காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

4 வருடத்தில் 8 முறை சிறுமியிடம் இருந்து கருமுட்டையை பணத்துக்காக விற்று குழந்தை இல்லா தம்பதிகளிடம் லட்சங்களை வசூலித்துக் கொண்டு குழந்தை வரம் கொடுத்த சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

ஈரோடு அருகே உள்ள கைகாட்டி வலசு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது முதல் கணவன் விபத்தில் உயிரிழந்த நிலையில் நான்கு வயது மகளுடன் தனியாக வசித்து வந்த நிலையில் சையத் அலி என்பவரை திருமணம் செய்துள்ளார்.

அதன் பின் தனது 2 வது கணவரின் வற்புறுத்தலின் பேரில் தனியார் மருத்துவமனைகளுக்கு பணத்திற்காக கருமுட்டைகளை விற்று வந்துள்ளார் அச்சிறுமி 12 வயதில் பூப்படைந்த பின்னர் தொடர்ச்சியாக தாயின் 2 வது கணவனான சையது அலி பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கூறப்படுகிறது.

சிறுமியை தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்ற தாய், தன்னை போலவே தனது மகளின் கருமுட்டைகளையும் விற்பனை செய்ததாகவும், ஒரு முறை கருமுட்டை வழங்கினால் 20 ஆயிரம் ரூபாய் வரை மருத்துவமனைகளிடம் இருந்து அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தனது ஒரே மகள் என்றும் பாராமல் அந்த சிறுமியையும் கருமுட்டை விற்பனை செய்வதற்கு தாயும், செய்யது அலியும் கட்டாயப்படுத்தி உள்ளனர்.
தற்போது அந்த சிறுமிக்கு 16 வயதாகும் நிலையில் தொடர்ச்சியாக 8 முறை ஈரோட்டில் செயல்படும் பல தனியார் மருத்துவமனைகளில் அந்த சிறுமியின் கருமுட்டைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த கருமுட்டைகளை வாங்கி குழந்தை இல்லா பெண்களின் கருப்பைக்குள் செலுத்தும் மருத்துவமனைகள், குழந்தை வரம் கொடுத்ததாக கூறி லட்சங்களை வசூலித்து வந்துள்ளனர்.

16 வயது சிறுமியை 22 வயது பெண்ணான பானு மகாலிங்கம் என்று போலியான பெயரில் திருமணமான பெண்மணியாக சான்றுகள் அளித்து கருமுட்டைகளை சட்டவிரோதமாக மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.

இவர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் இடையே அதே பகுதியைச் சேர்ந்த மாலதி என்பவர் இடைத் தரகராக செயல்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் தனது தாயின் காதலன் செய்யது அலியின் தொல்லை தாங்க இயலாமல் தப்பி வந்த சிறுமி, தனது தந்தையின் உறவினர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் மனு அளித்தார்.

இதையடுத்து அந்த சிறுமியின் தந்தை இந்திராணி, இரண்டாவது கணவர் சையத் அலி மற்றும் இடைத்தரகர் மாலதி ஆகியோரை சூரம்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்த சிறுமி ஈரோட்டில் உள்ள மாவட்ட குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments