வடபழனி யா மொய்தீன் உணவகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை..!

0 2265

சென்னையில் உள்ள யா மொய்தீன் உணவகத்தில் திடீர் சோதனை நடத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அங்கிருந்த கெட்டுப்போன இறைச்சிகளை கைப்பறியதுடன், சமையலறையை தற்காலிகமாக மூட உத்தரவிட்டனர்.

வாடிக்கையாளர்களின் புகாரை அடுத்து வடபழனியில் உள்ள அந்த உணவகத்தில் சோதனை நடத்திய அதிகாரிகள், சுமார் 50 கிலோ வரையிலான கோழி, மீன், இறால் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

இதனை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி முடிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்ட அதிகாரிகள், முறையான இறைச்சிகளை சமையலுக்கு பயன்படுத்துவதாக எழுத்துப்பூர்வ உறுதிமொழியை தர வேண்டும் என உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments