100வது நாளை எட்டிய போர்.. உக்ரைனை ஒரு போதும் கைப்பற்ற முடியாது என அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு.!

0 1585

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் நூறாவது நாளை எட்டியுள்ள நிலையில், இதுவரையில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் வலுக்கட்டாயமாக ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாட்டு மக்களிடம் நிகழ்த்திய உரையில், ஆதரவற்ற இல்லங்களில் இருந்தும் பெற்றோர்களிடம் இருந்தும் வலுக்கட்டாயமாக குழந்தைகள் நாடு கடத்தப்பட்டதாக கூறினார்.

போர்க் குற்றங்களை இழைத்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறிய ஜெலன்ஸ்கி, உக்ரைனை முழுவதுமாக கைப்பற்ற முடியாது எனவும் உக்ரைன் மக்கள் ஒருபோதும் சரணடைய மாட்டார்கள் என்றும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments