3.5 கி.மீ. நீள ஓடுபாதை.. சபரிமலையில் விமான நிலையம் அமைக்கப் புதிய திட்டம் தயார்..!

0 5826

சபரிமலையில் விமான நிலையம் அமைப்பதற்கான திருத்தப்பட்ட திட்டம் தயாராகியுள்ளதாகவும், விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் விரைவில் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குப் பக்தர்கள் சென்றுவர வசதியாக விமான நிலையம் அமைக்கக் கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மாநில அரசு ஏற்கெனவே வழங்கிய திட்டத்தில் ஒரு சில குறைபாடுகள் உள்ளதாகக் கூறி விமானப் போக்குவரத்து இயக்குநர் திருப்பி அனுப்பினார்.

திருத்தப்பட்ட திட்டத்தில் எதிர்கால வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு மூன்றரைக் கிலோமீட்டர் நீளத்துக்கு ஓடுபாதை அமைக்கப்படும் எனக் கேரள அரசு குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments