கடன் பிரச்சனையால் நகை மதிப்பீட்டாளர் கடிதம் எழுதி வைத்துவிட்டு மனைவி, மகளுடன் தூக்கிட்டு தற்கொலை

0 3109
கடன் பிரச்சனையால் நகை மதிப்பீட்டாளர் கடிதம் எழுதி வைத்துவிட்டு மனைவி, மகளுடன் தூக்கிட்டு தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கடன் பிரச்சனையால் நகை மதிப்பீட்டாளர் கடிதம் எழுதி வைத்துவிட்டு மனைவி, மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பஞ்சாப் நேஷனல் வங்கி நகை மதிப்பீட்டாளரான ரமேஷ், காலை போனை எடுக்காததாலும் அவரது வீடு உள்பக்கமாக பூட்டியிருந்ததாலும் சந்தேகமடைந்த உறவினர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

போலீசார் கதவை உடைத்து பார்க்கையில் ரமேஷ், அவரது மனைவி ரோகிணி, மகள் அர்ச்சனா ஆகியோர் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். ரமேஷ் எழுதியதாக கூறப்படும் கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments