நாளை முகூர்த்த நாள் என்பதால் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல இன்று கூடுதல் பேருந்துகள் இயக்கம்.!

0 2142

நாளை முகூர்த்த நாள் என்பதால் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல இன்று கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று அதிகளவில் பயணிகள் குவிந்ததால் பேருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது.

இதனை கருத்தில் கொண்டு நாளை முகூர்த்த நாளை ஒட்டி, இன்று சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 300 விரைவுப் பேருந்துகள் உட்பட 2,400 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தேவைப்பட்டால் மாநகரப் பேருந்துகளும் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments